திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியின் பின்னாலுள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் (11) மாலை புதைக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தம்பலகாமப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது :

உரிய வீட்டில் குடியிருந்து வந்த குடும்ப பெண்ணை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து உரிய குடும்பப் பெண்ணின் கணவரிடம் விசாரனை செய்யப்பட்டபோது தனது மனைவியான 51 வயதான இந்திரானி மில்வான எனும் பெண்ணை மண்வெட்டியால் தாக்கி தனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் உயிரிழக்கச் செய்து விட்டு சுமார் 75 மீற்றர் தூரத்தில் குழி ஒன்றில் புதைத்து விட்டதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.


குடும்ப பிளவு காரணமாக குறித்த பெண்னை மண்வெட்டியால் தாக்கி கொன்றதாகவும் விசாரனை மூலமாக மேலும் தெரியவயருகிறது
குறித்த சம்பவ இடத்துக்கு (12)தடயவியல் பொலிஸார்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி சென்று விசாரனையில் ஈடுபட்டு வருவதுடன் கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனபது அவர்கள் சென்று உரிய சடலம் புதைக்கப்பட்ட குழியினை தோன்றுவதற்கு அனுமதியளித்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

அழுகிய நிலையில் காணப்பட்ட தோண்டி எடுக்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டதுசம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.