2020. 06. 15, திங்கட்கிழமை முதல் இயங்கும் தனியார் கல்வி நிறுவன வகுப்புகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன:
2020. 06. 10 அன்றைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பின்படி -
—> ஒரு வகுப்பில் கலந்து கொள்ளக்கூடிய அதிகபட்ச மாணவர்கள் 100 பேர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளனர்.
—> சாதரண சூழலில் குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களை அமர்த்தக்கூடய ஒரு வகுப்பு இடத்தில், தற்போதைய சூழலில் அந்த தொகையிலும் பாதி அளவு தொகையான மாணவர்களை மட்டுமே அமர்த்திக் கற்பிக்க முடியும்.
இந்த வரையறைகளுக்கு உட்பட்டு தனியார் வகுப்புக்களை இயக்கும் போது - கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றியே இயக்க வேண்டும்.