கொரோனா நோயாளிகள் செல்போன்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கலாம் என்று மேற்கு வங்க மாநில முதல்வரிடம் அங்குள்ள டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.


ஆஸ்பத்திரிகளில் கொரோனோ வைரஸ் தொற்றில் இருந்து மீள்வதற்காக அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறக்கும்போது அவர்களின் உடல்களை பார்ப்பதற்கு குடும்பத்தினருக்கு அனுமதி தரப்படவில்லை என்றும் இதுதொடர்பாக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி உள்ளாட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள்தான் இறுதி சடங்குகளை செய்து முடிப்பதாகவும், இதனால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை, அவர்களது குடும்பத்தினர் நடத்த முடியாமல் வேதனை படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கொரோனாவால் இறந்துபோகும் ஒருவருக்கு முறையான நெறிமுறைகளை பின்பற்றி பின்னர் அவருடைய உடலை பார்ப்பதற்கு அவருடைய குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் இறுதிசடங்கில் அவர்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை எல்லாம் முன்வைத்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அந்த மாநில டாக்டர்கள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதே நிலையில் இறந்தவர்களின் உடலை காண்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்க மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.