கடலூரில் குட்டையில் விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தாயும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கர் மற்றும் அவரது மனைவி திவ்யா (26) கடலூர் மாவட்டம்  ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் ஆரியன் என்னும் மகனும் உள்ளார். இந்நிலையில் திவ்யா  மற்றும் அவரது மகன் ஆரியன் கல்குவாரி இருக்கும் குட்டைக்கு எப்போதும் போல் துணி துவைப்பதற்கு சென்றுள்ளார்.

திவ்யா துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது குட்டையில் அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்த ஆரியன் தீடீரென கால் வழுக்கி குட்டையில் உள்ள நீரில் முழ்கியுள்ளார். அந்த சமயம் குவாரியில் யாரும் இல்லாததால், மகனை காப்பாற்ற கத்திய திவ்யாவிற்கு யாரும் உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திவ்யா பதட்டத்தில் நீச்சல் தெரியவில்லை என்றாலும் 'அம்மா உன்னை காப்பாற்றுகிறேன்' என்று தன் மகனை காப்பாற்ற குட்டைக்குள் இறங்கியுள்ளார். துருத்தஷ்டவசமாக மகனையும் காப்பாற்ற முடியாமல், அவரும் மீண்டு வர முடியாமல் தத்தளித்து குட்டையிலேயே மூழ்கி இறந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மற்றும் திட்டக்குடி தீயணைப்புப் படையினர் குவாரிக்கு சென்று, தாய் மற்றும் மகனின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ராமநத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகனை காப்பாற்ற சென்ற தாயும் ஒரே குட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.