இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கைக்குள் வரும் எந்தவொரு பயணியும் தங்கள் நாட்டில் PCR பரிசோதனை மேற்கொண்டமைக்காக அறிக்கையுடன் வர வேண்டும்.
அவ்வாறு அவர்கள் பரிசோதனைக்கு உட்பட்டிருந்தாலும் இலங்கை விமான நிலையத்தில் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிக்கை வரும் வரை விமான நிலையத்திற்கு அருகில் தடுத்து வைக்கப்படுவர். அறிக்கை வந்தவுடன் அவர்கள் சுற்றுலா பயணத்திற்காக விடுவிக்கப்படுவார்கள்.
எனினும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்துக் கொண்ட ஹோட்டல்கள் அல்லது தங்குமிடங்களில் மாத்திரமே அவர்கள் தங்க வேண்டும்.
அதனை தொடர்ந்து அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் இடங்களில் மேலும் 2 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.