கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்திற்குக் கொண்டு வரப்பட்ட கொள்கலன்களை இன்று இறக்காவிட்டால் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக துறைமுக ஊழியர்களின் தொழிற் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்திற்குக் கொண்டு வரப்பட்ட கொள்கலன் கிரேன்களை உடனடியாக கப்பலிலிருந்து இறக்கக் கோரி துறைமுக ஊழியர்களின் தொழிற் சங்கத் தலைவர்கள் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கொள்கலன்கள் ஐந்து நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது எனவும் 20 ஆம் திகதி தரையிறக்க நியமிக்கப்பட்ட போதிலும் அது இன்னும் செயற்படவில்லை என்றும், இன்று இறக்கப்படாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஒரு தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் துறைமுக சுயாதீன தொழிற்சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவகே தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களைத் திருப்பி அனுப்ப முயற்சி இருப்பதில் சந்தேகிப்பதாக பங்கமுவே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாகக் கலந்துரையாடல் இடம்பெறும்வரை தலைவர் அலுவலகத்திற்கு முன்னால் இருப்பதாகவும், கொள்கலன்களைத் தரையிறக்க நடவடிக்கை எடுக்காவிட்டாலோ வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுப்படபோவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாகத் துறைமுக அதிகாரியின் துணைத் தலைவர் வீரமனிடம் கேட்டபோது, இது கடந்த கால அரசாங்கத்திலிருந்த ஒரு பிரச்சினை என்றும், இது விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.