சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தில் நிலவிய குழப்ப நிலை நீதிமன்ற உத்தரவினால் முடிவுக்கு வந்தது.


சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாளின் தேவஸ்தானத்தில் கடந்த மாதம் 21ஆம் திகதி கோவிலை தற்போது நிர்வகிப்போர் என்று கூறப்படுவோரால் ஆலய குருக்களிடம் இருந்து கோவில் திறப்புக்கள் பறிக்கப்பட்டு பூஜைக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து கோவில் பூட்டப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பில் கிராமத்து மக்களால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது.

இன்று நீதிமன்றத்தினால் திறப்புக்களை மீளவும் குருக்களிடம் ஒப்படைக்குமாறும் ஆலய குருக்களே தொடர்ந்து பூஜைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டது. இதனால் இதுவரை நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது.

கடந்த மூன்று வாரமாக ஆலயத்தில் பூஜைகள் எதுவும் இடம்பெறாமல் கோவில் பூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீரணி நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம்