யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து தமது காதலர்களை சந்திக்க பஸ் ஏறிவந்த இரு யுவதிகள் வரணி மாசேரி ஆறாம் கட்டைப் பகுதியில் சந்திப்புக்கு தயாரான போது இன்னொரு குழுவினரால் கடத்தப்பட்டனர்.


இச்சம்பவம் கடந்த 8ஆம் திகதி நடந்திருந்தது.
அதில் ஒரு பெண் தப்பியோடி கொடிகாமம் பொலிஸில் சரணடைந்திருந்த நிலையில் மற்றைய பெண் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட 24 வயதுடைய பெண் தான் மூவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.