இந்தோனேசியாவின் டோராஜாவில் வசிப்பவர்கள் தங்கள் இறந்த அன்புக்குரியவர்களை வருடத்திற்கு ஒரு முறை கல்லறைகளில் இருந்து வெளியே அழைத்துச் சென்று கொண்டாடுகிறார்கள்.


திருவிழா 'மானீன்' என அழைக்கப்படுகிறது. இறந்தவர்கள் சவப்பெட்டிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டு, புதிய ஆடைகள் அணிவிக்கப் படுவார்கள் . தொலைதூரத்திலிருந்து வரும் உறவினர்கள் விருந்துண்டு, கதைகளை பரிமாற்றிக்கொள்ள வருகிறார்கள்.


இறந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சிகரெட்டுகள் கூட வழங்கப்படுகின்றன, ஏனென்றால் ஆவி உடலுக்கு அருகில் உள்ளது மற்றும் கவனிப்பை விரும்புகிறது என்பதால்.


(மருந்துகள் பயன்படுத்தி உடல்கள் பாதுகாக்கப் படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.)