கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தொல்பொருள் பிரதேசங்களையும் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு ஜனாதிபதியின் விசேட செயலணியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எழும் அழுத்தங்களை நிராகரித்து செயலணியின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு செயலணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து தொல்பொருள் பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளையும் அளவீடு செய்யும் பணிகளை விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி கிழக்கு மாகணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்யும் வேலைத்திட்டம் தொடர்பிலான முதலாவது கூட்டம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜக்பக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.