பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் உள்துறை முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வலைதள எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு பாகஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் தங்கியிருந்தபோது, அப்போதைய பிரதமர் யூசுப் ரசா கிலானி, சுகாதாரத்துறை அமைச்சர் மக்தூம் ஷாஹாபுதீன் ஆகியோரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சிந்தியா டி ரிட்சி என்ற வலைதள எழுத்தாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது முகநூல் நேரலையில் இந்த குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்துள்ளார். புகார்கள் மீது தன்னிடம் போதிய ஆதாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அவர் வலியுறுத்தியுள்ளார்.