கோவையில் பாஜக கட்சியினர் சீன கொடிய கிழித்து, சீன போன்களை உடைத்து அந்நாட்டுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.


இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார். அதேபோல சீன ராணுவத் தரப்பிலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் லடாக் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கோவை காந்திபுரம் பாஜக அலுவலகம் முன்பாக உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட பாஜகவினர் சீனக் கொடியை கிழித்து அந்நாட்டுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும் சீன தயாரிப்பு செல்போன்களை உடைத்தனர்.