பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,551 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,472 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான சாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவிட்டுள்ள அவர், "வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல்நிலை மிகமோசமாக உள்ளது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன்.
துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்" எனத் தெரிவித்துள்ளார்.