தெற்காசியாவில் முதன்முறையாக — சுகாதார அமைச்சும், இலங்கை வைத்தியர் சங்கமும் இணைந்து "O-Doc" என்ற கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த செயலி ஊடாக, எவ்வித கட்டணமும் செலுத்தாமல், காணொலி தொழில்நுட்பத்தின் மூலம் - மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கொவிட் -19 நோய்க்கிருமி நம் நாட்டில் திறம்படக் கட்டுப்படுத்தப்பட்டாலும், சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் சமூக இடைவெளியை பேண வேண்டியது அவசியமாக உள்ளது.