இன்றைய பரிசோதனையில் இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அன்னையில் இந்தியாவில் தொற்று உறுதிபடுத்தப்பட்டவரோடு தொடர்பைபேணியவர்கள்15 பேருக்கான பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன அவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் நேற்று 13 பேருக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் இன்று பரிசோதிக்கப்பட்டது. அவர்களிலும் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று 119 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 5 பேர்.

* பொது வைத்தியசாலை வவுனியா – ஒருவர்.

* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உடுவில் - 15 பேர்.

* இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு – 98 பேர். ( ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.)