மொனராகல படல்கும்புர பரேய்யன் நீர்தேகத்தில் நீராட சென்ற 7 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை தனது குடும்ப உறுப்பினர் ஒருவருடன் நீராடச் சென்றுள்ள போரே இவ்வாறுஉயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிறுவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து படல்கும்புர காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.