வறுமையின் காரணமாக, உதவி கேட்கச் சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த நான்கு முதியவர்கள் உட்பட 8 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் மனநலம் குன்றிய மனைவி மற்றும் 8 வயது மகளுடன் வறுமையில் வசித்து வந்துள்ளார்.‌ இத்தனை வறுமையின் காரணமாக அந்த சிறுமி அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று உதவி கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.


அவ்வாறு உதவி கேட்டு சென்ற வீடுகளில் சிறுமிக்கு பண உதவி செய்து விட்டு, தொடர்ந்து சிலர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.  இதில் அப்பகுதியை சேர்ந்த 75 வயதான முகமது நூகு, 52 வயதான  சகாயதாசன் , 53 வயதான ஜாகீர் உசேன்,  66 வயதான அப்துல் ஜாபர் மற்றும் இவர்களைத் தவிர மேலும் 2 சிறுவர்களும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.