மடகாஸ்கர் தீவின் கல்வி மத்திரி 15 கோடி ரூபாய்க்கு லாலிபாப் வாங்க திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய பெருங்கடல் தீவு நாடான மடகாஸ்கரில், ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர் கல்வி மந்திரியாக இருந்து வந்தார். இவர் சோதனை செய்யப்படாத கசப்பான மூலிகை மருந்துகளைக் கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுத்தார். மருந்தின் கசப்பை மறைப்பதற்காக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா 3 லாலிபாப்கள் வழங்க முடிவு செய்தார். இதற்காக 2 மில்லியன் டாலர் மதிப்புக்கு (இந்திய ரூபாயில் ரூ.15 கோடி) லாலிபாப் வாங்க திட்டமிட்டார்.

இதனை அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ரத்து செய்துவிட்டார். இதனை அடுத்து கல்வி மந்திரி ரிஜாசோவா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நாட்டில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ‘கோவிட் ஆர்கானிக்ஸ்’ என்ற மூலிகை டானிக் பரிந்துரை செய்யப்படுகிறது. இது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த டானிக் கொரோனாவை எதிர்த்து போராட உதவும் என அங்கு நம்பப்படுகிறது.