வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்டத்தில் உள்ள, பாடசாலை குடிநீர்த் தாங்கியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் 2 மாதமாக குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் , குறித்த பாடசாலையின் அதிபர், பாடசாலையின் நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக நீண்ட நாள்களுக்குப் பிறகு பாடசாலைக்குச் சென்றிருந்த போது, பாடசாலையின் வளாகத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இது குறித்து அதிபர், அயலவர்களுடன் உதவியுடன் சென்று பார்த்தபோது, பாடசாலைக்கு பிரதானமாக விநியோகிக்கப்படும் குடிநீர் தாங்கியிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளமை.
இதனையடுத்து , குறித்த நீர்த்தாங்கியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிசாருக்கு அதிபர் முறையிட்டுள்ளதுடன், வட்டவளை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.