படத்தில் நீங்கள் காண்பதுத ஒற்றை தட்டு தராசு. நமது ஊர்களில் காலங்காலமாக பண்டங்கள் நிறுப்பதற்கு நம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்று. இதை  'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவார்கள். சில இடங்களில் தூக்கு, தூக்குகோல் என்றும் சொல்லுவார்கள்.

'வெள்ளைக்கோல்வரை'என்பதன் சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம் வாய்களுக்குள் நுளைந்து சிதைந்து வெள்ளிகாவரை என்று ஆகி விட்டது. அந்த கோலில் வெள்ளை நிறத்தில் சில கோடுகள் வரைந்திருப்பார்கள். அதனால்தான் இந்த பெயர். அந்த கோடுங்கள்தான் எடைகளுக்கான குறியீடுகள். பொதுவா தாரசு என்றால் இரண்டு தட்டு இருப்பது வழக்கம். ஒன்று எடைக்கல் வைப்பதற்கு.

இன்னொன்று எடை போடுவதற்கு வேண்டியதை வைப்பதற்கு. ஆனால் இந்த வெள்ளிக்காவரை தூக்குகோலில் ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலில் வரைந்திருக்கும் கோடுகள் தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது. அங்க இங்க நகர்த்தகூடியவாறு  அந்த கோலில் ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பர்கள்.

தேவையான எடைக்கு உண்டான கோட்டுக்கு கயிற்றை நகர்த்தி பிறகு அந்த.கோட்டில் கயிற்றை பிடித்து எடை போட வேண்டிய பொருளை தராசுதட்டில் வைத்து கோலை தூக்கி எடை போடவேண்டியது தான். கோல் பக்கவாட்டில் சமமா இருந்தால் சரியான எடை காட்டுமென்று அர்த்தம்.

மேல் பக்கத்தில் தூக்கினால் நிறுக்கும் பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டில் இருக்குதென்று அர்த்தம். கோல் கீழ்பக்கம் தாழ்ந்தால் குறைவா இருக்குதென்று  அர்த்தம். இப்போது பழக்கத்தில் இருக்கும் இரட்டைத்தட்டு தராசை விட இந்த ஒற்றைத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைகள் உண்டு. இதில் பண்டங்களை நிறுக்க தனியாக எடைக்கல் ஒன்று தேவையில்லை.

இரட்டைத்தட்டுத் தராசில் ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருளை நிறுப்பதற்கு முன் எடைக்கல் ஒரு கிலோவும் எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோ என்று இரண்டு கிலோ எடையை தூக்குவதற்கான சக்திய நம் உடல் செலவழிக்கவேண்டும். ஆனால் ஒற்றைத்தட்டு தராசில் இந்த பிரச்சனை இல்லை.

இன்று ரயில்வே ஸ்டேசன்,பெரிய அரிசிஆலைகள் மாதிரி இடங்களில பண்டங்களை நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'பிளாட்பாரம் பேலன்ஸ்'ங்களுக்கு மூலம் நம் மூதாதைகள் கண்டுபிடித்த ஒற்றைத்தட்டு தராசு தான். நாம் பாதுகாக வேண்டிய நம் தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்தி நமக்கே விற்பனை செய்துகொண்டிருக்க. நாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறோம்.

திருவள்ளுவர் கூறிய "சமன் செய்து சீர்தூக்கும் கோல்" இது தான். இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல் என்பது வேறு ஒன்றை ஞாபாகப்படுத்துகிறது. தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம் என்று ஒரு பெயர் இருக்கிறது. இந்த பெயர் வரக்காரணம் சூரியன் துலாராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது.

சூரியன் துலா ராசியில் நுழையும் நாள் அன்றைக்கு பூமியில் பகலும் இரவும் சம நீளத்தில் இருக்கும். அதாவது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம். மற்ற நாட்களில் எல்லாம் பகலுக்கும் இரவுக்கும் நீளத்தில் கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும்.

எனவே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கின்ற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் நம் மூதாதைகள். இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம் ஒற்றைதட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கிறது.

இப்படி வானியல், கணிதம், கணக்கீடு, சமானம் என்று நம் முன்னோரின் பன்முக அறிவு செழிப்பை நினைத்து பார்க்கையில் நம்மால் ஆ....ன்னு வாயை பிளக்கதான் முடிகிறது. 

தமிழரின் அறிவு தொடர்ச்சி.. 

"நம்மள விட்டு எப்ப, எங்க அறுந்து போச்சுங்கிற கேள்விதான்... பதில் இல்லாம நம்ம முன்னால நின்னுக்கிட்டு இருக்கு"....... 

ஆய்வு