லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் ஒக்டெய்ன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிரிக்க தீர்மானித்துள்ளது.


இந்நிலையில் 137 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்ட ஒக்டெய்ன் 92 பெற்றோல், விலை அதிகரிப்பின் படி142 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படவுள்ளது.
இதேவேளை, ஏனைய எரிபொருள்களின் விலையில் எவ்வித மாற்றமில்லையெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 970 ஆக அதிகரிப்பு!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 970ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது புதிதாக 06 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 6 கொரோனா தொற்றாளர்களும் கடற்படை உறுப்பினர்கள் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.