கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை, சனிக்கிழமை, ஊரடங்குச் சட்டம் இருக்காது:


கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16ஆம் திகதி, சனி, வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

மே 17ஆம் திகதி, ஞாயிறு, நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 18, திங்கள், அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மே 23, சனிக்கிழமை, வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11ஆம் திகதி, திங்கள், ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம், நாளை 16ஆம் திகதி, சனிக்கிழமை, வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு, மே 18, திங்கள், முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.

ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் ஏனைய அறிவுறுத்தல்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை.